Site icon Colourmedia News

யார் இந்த பறையர்கள்?

பறையர், தேவர், நாடார் ,கவுண்டர், படையாச்சி, நாயக்கர் சாதி பெயரா?  இல்லை. தேவர் என்கிற ஒரு இனமோ, சாதியோ ஆதியில் இல்லை .ஆம் இருபதாம் நூற்றாண்டில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முன் முயற்சியால் 1911 ம் ஆண்டிற்கு பின் கள்ளர், மறவர், அகமுடையார் என அழைக்கப்பட்ட முக்குலத்தோர் ஒன்றினைக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்கனவே தமிழ் அகராதியில் உயர்வான பொருள் கொடுத்த தேவர் என்ற பெயரை முத்துராமலிங்க தேவர் சூட்டினார்.

அதே போல் நாடார் என்ற பெயரும் ஆதியில் கிடையாது சாணார் என அழைக்கப்பட்டவரே 19 ம் நூற்றாண்டில் தங்களுக்கு நாடார் என்ற பெயரை சூட்டி கொண்டனர். அதே போல் கவுண்டர் என்பதும் சாதி அல்ல.

ஆம் கொங்கு மண்டலம் என சொல்லப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல்,திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள வேளான்மை செய்யும் விவசாயிகள் தங்களுக்குள் கொங்கு மண்டல வேளாளர் என ஆரம்பத்தில் அழைத்து பின் தங்களுக்கு கவுண்டர் என்ற அர்த்தம் இல்லாத அடைமொழி சேர்த்தனர்.அதே போல் படையாச்சி என்பதும் சாதியல்ல. சாம்பவராயர் என்கிற பறையரின அரசர்களின் படைப்பிரிவின் தளபதிகளும் வீரர்களும் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயரே படையாச்சிகள் இதை பார்த்த தொண்டை மண்டலம் எனச்சொல்லப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளும் தங்களை படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர் என அழைத்து கொண்டனர். அதே போல் நாயக்கர் என்பது சாதியா என்றால்? அதுவும் கிடையாது.

விஜய நகர பேரரசின் படையெடுப்பு காலமான 13 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசை அண்டி பிழைத்தவர்கள் தங்களுக்கு வைத்து கொண்ட பெயர் நாயக்கர்கள் இவர்கள் வேறு நாயுடு வேறு.

அதே போல் பறையர் சாதியா? என்றால் கிடையாது இது ஒரு பேரினம். புற நாணூற்றிலே”” துடியன், பாணன், பறையன் ,கடம்பன் என்று இந்நான்கல்லது குடியில்லை” என்று பாடப்பட்ட ஒரு பேரினம். இவர்களில் பல தொழில் வல்லுநர் உண்டு .இவர்களில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் கணியன் என்றும் வள்ளுவன் என்றும்,உண்ண உணவை தயாரித்த விவசாயிகள் சாம்பவ குல வேளாளர் என்றும், உடுக்க உடை கொடுத்த நெசவுப்பறையர் , சாலியப்பறையர் என்றும் நீரை உருவாக்க கிணறு தோன்டிய தோண்டி பறையர், தோட்டி பறையராகவும்,மோளமடித்த முரசுபறையரும்,கோட்டை கட்டி வாழ்ந்த கோட்டை பறையரும், யாருக்கும் வீரத்தில் சலைக்காத கிழக்கத்திய பறையர் உட்பட 108 குழுக்கள் உள்ளன. இந்த பறையர் என சொல்லப்படும் பேரினமே புரிதலில்லாமல் இன்று சாதியாய் பார்க்கப்படுகிறது. இன்றைய 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பறையர் உள்ளனர் .இது ஐநா சபையில் இடம் பெற்றுள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

Exit mobile version