Site icon Colourmedia News

தேர்தல் பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் தேர்தல் காலத்தில் சமய நிறுவனங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதும், அழுத்தங்களை ஏற்படுத்துவதும் முற்று முழுதாக தடைசெய்யப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version