Site icon Colourmedia News

நாட்டை சூறை­யாடும் அர­சி­யல்­வா­தி­களே மக்கள் பிரிந்­தி­ருப்­பதை விரும்­பு­கின்­றனர் : முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா

நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான சிங்­கள பௌத்த மக்கள் இன­வா­தத்தை விரும்­ப­வில்லை. சகல மக்­களும் சம உரி­மை­யுடன் வாழ்­வ­தையே அவர்கள் விரும்­பு­கின்­றார்கள். யுத்தம் இடம்­பெற்­ற­போது யாழ்ப்­பா­ணத்தை அவர்­க­ளிடம் கொடுத்­தா­வது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வா­ருங்கள் என சிங்­கள மக்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். ஆனால், நான் தான் நாடு பிள­வு­ப­டக்­கூ­டாது என்று அதற்கு இடங்­கொ­டுக்­க­வில்லை. மேலும், நாட்டின் வளங்­களை சூறை­யாடும் குறிப்­பிட்ட சில அர­சி­யல்­த­லை­வர்­களே மக்கள் பிரிந்­தி­ருப்­பதை விரும்­பு­கின்­றார்கள். அதற்கு நாங்கள் இடங்­கொ­டுக்கக் கூடாது.

வரு­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு கூட மக்­க­ளுக்­கி­டையில் சம­உ­ரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றின்றேல் அது வார்த்­தை­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓர் அர­சி­ய­ல­மைப்­பா­கவே காணப்­படும் என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

நாடெங்­கி­லு­முள்ள 15000 வறிய மாண­வர்­க­ளுக்கு பாட­சாலைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்சம் பவுண்­டே­ஷனால் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது பிர­தம விருந்­தி­ன­ராக வரு­கை­தந்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

எமது நாட்டை ஆங்­கி­லே­யர்­க­ளி­ட­மி­ருந்து மீட்டு சுதந்­திரம் பெற்­றுக்­கொள்­வ­தற்கு இங்­குள்ள அனைத்து இனங்­களைச் சேர்ந் தலை­வர்­களும் பாகு­பா­டின்றி ஒன்­றாக போரா­டி­யி­ருக்­கின்­றார்கள். ஆனால், அதன்­பின்னர் ஏற்­பட்ட இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பாகு­பா­டுகள், முரண்­பா­டுகள் கார­ண­மாக கிட்­டத்­தட்ட முப்­பது வரு­ட­கால யுத்தம் ஒன்­றுக்கு நாம் முகங்­கொ­டுக்க நேரிட்­டது. இதனால் நாட்டின் அழி­வுகள் ஏற்­பட்­டன. இனங்­க­ளுக்­கி­டையில் பெரிய பிள­வொன்று ஏற்­பட்­டது.

ஆனாலும், கடந்த கால அர­சாங்கம் யுத்த வெற்­றியை கார­ணங்­காட்டி மீண்டும் ஆட்­சிக்கு வந்து இனங்­க­ளுக்­கி­டையில் பாரிய பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. என்­று­மில்­லா­த­வாறு சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

அதன்­பின்னர் 2015 ஆம் ஆண்டு புதிய அர­சாங்கம் தெளி­வான தரி­ச­னத்­து­டனும் தெளி­வான வாக்­கு­று­தி­யு­டனும் கொள்­ளை­ய­டிக்­காமல் நாட்டில் ஆட்­சியை முன்­னெ­டுத்துச் செல்­வ­தாக கூறிக்­கொண்டு ஆட்­சி­பீடம் ஏறி­யது. அது­மட்­டு­மன்றி கடந்த ஆட்­சியில் ஊழலில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்து அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தா­கவும் தெரி­வித்­தது. மேலும், நாட்டில் சகல இனத்­த­வர்­களும் சுதந்­தி­ர­மாக வாழ­வழி ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தா­கவும் தெரி­வித்­தது இது தற்­போது நிறை­வே­றி­யுள்­ளது.

அது­மட்­டு­மன்றி, அனைத்து இனங்­க­ளுக்கும் சம உரிமை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தாகத் தெரி­வித்­தது. உண்­மை­யா­கவே சிறந்த ஓர் அர­சி­ய­ல­மைப்பு எமக்கு அவ­சியம். ஆகவே, வர­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு அனைத்து இனங்­க­ளுக்கும் சம உரி­மையை வழங்கும் வகையில் உரு­வாக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் மக்­க­ளுக்­கி­டையில் சம உரி­மை­யையும் கருத்­திற்­கொண்டு அர­சியல் அமைப்பு தயா­ரிக்­கப்­ப­டா­விட்டால் அது வார்த்­தை­க­ளுக்கோ அல்­லது வேறு சில விட­யங்­க­ளுக்கோ மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பா­கி­விடும் என்­பதை அனை­வரும் நினை­வில்­கொள்­ள­வேண்டும்.

ஆனால், என்­னதான் நடந்­தாலும் நாங்கள் சமா­தா­ன­மாக வாழ்­வ­த­னூ­டாக மட்­டுமே நாட்டை முன்­னோக்கிக் கொண்­டு­செல்­லலாம். எனது அர­சியல் சேவைக் காலங்­களில் மிகவும் பின்­தங்­கிய கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள சிங்­கள மக்­க­ளிடம் சென்று அர­சியல் நட­வ­டிக்­கைகள் குறித்து பேசி­யுள்ளேன். அப்­போது எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெளி­வாக விளங்­கி­யது. அதா­வது தமிழ் , முஸ்லிம், சிங்­கள மக்கள் பிரிந்­தி­ருப்­பதை அவர்கள் விரும்­ப­வில்லை. தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு சம உரிமை கிடைக்­க­வேண்டும் என்­பது அவர்­க­ளு­டைய கருத்­தாக அமைந்­தது.

இன்­றைக்கு முப்­பது அல்­லது முப்­பத்­தைந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மொன­ரா­கலை மாவட்­டத்­திற்குச் சென்றேன். அது சிங்­கள பௌத்த மக்­களைக் பெரும்­பாண்­மை­யாகக் கொண்ட ஒரு பிர­தேசம். அங்­குள்ள மக்­க­ளுடன் சந்­தித்த நாட்டு நிலை­வரம் குறித்த பேசி­ய­போது “இந்த நாட்டில் இவ்­வா­றான ஒரு யுத்தம் இடம்­பெ­றக்­கூ­டாது. இதனால் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பேதம் உரு­வா­கின்­றது. ஆகவே அவர்கள் கேட்­கின்ற யாழ்ப்­பா­ணத்தைக் கொடுத்­தா­வது இந்த யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வா­ருங்கள்” என அங்­குள்ள ஒரு சிலர் தெரி­வித்­தனர். அதைக்­கேட்ட ஏனைய பௌத்த சிங்­கள மக்­களும் “அவ்­வாறே யாழ்ப்­பா­ணத்தைக் கொடுத்­தா­வது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வா­ருங்கள்” எனத் தெரி­வித்­தனர்.

அதற்கு நானோ ” அர­சியல் ரீதி­யாக நாட்டை துண்டு துண்­டா­கப்­பி­ரித்துக் கொடுக்­க­மு­டி­யாது. ஆனால், அவர்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய சம உரி­மையைக் கொடுத்தால் அவர்கள் அவ்­வாறு தனி­நாட்டைக் கோர மாட்­டார்கள்” என்று அவர்­க­ளிடம் தெரி­வித்தேன்.

ஆகவே இலங்­கையில் வாழ்­கின்ற பெரும்­பான்­மை­யான சிங்­கள பௌத்த மக்கள் இன­வா­தத்தை விரும்பவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

தனியாக எதுவும் செய்யமுடியாத, நாட்டின் வளங்களை சூறையாடுகின்ற சில அரசியல்தலைவர்களே, இவ்வாறு மக்கள் பிரிந்திருப்பதை விரும்புகின்றார்கள். அதைப் பற்றி சொல்லக்கூட எனக்கு வெட்கமாக இருக்கின்றது.

எம்மிடம் நல்ல சமூகத்தலைவர்கள், அரசியல்வாதிகள் என பெரும்பாலானவர்கள் இருந்தாலும் இனவாதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் இவர்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று பயப்படாமல் பேசவேண்டும். அவ்வாறு பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் நின்றுவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version