Site icon Colourmedia News

பிர­ஜை­களின் தனி­யு­ரிமை பாது­காப்பு சட்டம் : பிர­தமர் ஆலோ­சனை

நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் தனி­யு­ரி­மையை பாது­காக்கும் வகை­யி­லான விதி­வி­தா­னங்கள் அடங்­கிய விஷேட சட்ட வரைவு பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

தனி­நபர் தொலை­பே­சி­களை ஒட்­டுக்­கேட்டல் மற்றும் தனி­நபர் அடை­யா­ளத்தை அச்­சு­றுத்தும் வகையில் செயற்­படல் போன்ற விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக விஷேட சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் தனி­யு­ரி­மையை பாது­காக்கும் வகை­யி­லான சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வது இதுவே முதல் தட­வை­யாகும். எவ்­வா­றா­யினும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரின் தொலை பேசி உரை­யா­டல்கள் தொடர்­பான தக­வல்கள் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இந்தச் சம்­பவம் தொடர்பில் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிறப்­பு­ரிமை குழு இவ்­வா­ரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் கூடி தொலை பேசி உரை­யா­டல்கள் தொடர்­பான தக­வல்கள் கசிவு விவ­காரம் குறித்து கலந்­து­ரை­யாட உள்­ளனர். இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் எந்­த­வொரு பிர­ஜைக்கும் இடம்­பெற்­று­விடக் கூடாது என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ளது.

எனவே நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version