Site icon Colourmedia News

சுதந்­தி­ரக்­கட்­சியும் மஹிந்த அணியும் தனித்து வேட்­பாளர் தெரிவில் மும்­முரம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜனப் பெர­மு­னவும் தனித்­த­னியே எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்கில் வேட்­பா­ளர்­களை தெரி­வு­ செய்யும் பணியில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.

இரண்டு தரப்­பி­னரும் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­வது சாத்­தி­ய­மற்றுப் போயுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ள நிலையில் தனித்து வேட்­பா­ளர்­களை தெரிவு செய்யும் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யா­னது ஏற்­க­னவே பல்­வேறு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்­து­விட்­டது. அது­மட்­டு­மன்றி பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு சிறி­லங்கா பொது­ஜன பெர­முன என்ற அடிப்­ப­டையில் போட்­டி­யிடும் நோக்கில் கட்­டுப்­ப­ணத்­தையும் செலுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனித்துப் போட்­டி­யிடும் நோக்கில் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் பணியில் மும்­மு­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. வேட்­பாளர் தெரிவு மிக மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­வ­தாக சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் இரண்டு கட்­சி­களும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் தனித்­த­னியே பேட்­டி­யிடும் நோக்கில் வேட்­பாளர் தெரிவில் மும்­முரம் செலுத்­தி­யுள்­ளன. எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் 60 வீத தொகு­தி­மு­றை­மை­யிலும் 40 வீத விகி­தா­சார முறை­மை­யிலும் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Exit mobile version