டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அண்மையில் உலக அழகியாகப் பட்டம் வென்ற மனுஷி சில்லரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக விராட் கோலியைச் சந்தித்த மனுஷி சில்லர், தனது பேவரைட் கிரிக்கெட்டர் விராட்தான். அவர் செய்த சாதனைகள் ஏராளம் என்று புகழ்ந்து தள்ளினார். முடிவில் விராட் கோலியிடம், மனுஷி சில்லர் ஒரு கேள்வியை முன்வைத்தார். `இந்தத் தருணத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீங்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறீர்கள். சமூக முன்னேற்றத்துக்கு உங்களது பங்களிப்பையும் அளித்து வருகிறீர்கள். ஆனால், இளம் வயதினர் ஏராளமானவர்கள் உங்களைப் பின்பற்ற விழைகிறார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என்ற கேள்வியை விராட் கோலிக்கு முன்வைத்தார் மனுஷி சில்லர்.