கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றவாளியை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஜன. 17) ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலையின் போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் ஜூனியர் ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 61 வயதான டாக்டர் எஸ்.சி.ஆர். பெரேரா (ஜனவரி 18) முன்னதாக கைது செய்யப்பட்டார். புதன்கிழமை காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் வைத்தியசாலைச் சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் குற்றம் சுமத்தியதையடுத்து, அவருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது ஊழியர் ஒருவரை அவர் தாக்கியுள்ளார். வைத்தியசாலையின் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, ஜூனியர் பெண் ஊழியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;