பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள ‘சிறப்பு வகை’ கைதி ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்கவின் கூற்றுப்படி, அமன் ஷேக் என்ற இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், சிறைச்சாலை வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு (ஜனவரி 03) தமக்கு மருந்துகளை வழங்கிய விநியோக அதிகாரியைத் தாக்கியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து அதிகாரி தரையில் சுருண்டு விழுந்து, தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த கைதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சிறைச்சாலை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;