மின்சார கட்டணங்கள் 2024 ஜனவரியில் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, வானிலை முன்னறிவிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, 2024ஆம் ஆண்டு மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், தற்போது நிலவும் பருவமழை காரணமாக இலங்கையின் மின்சாரத் தேவை இன்னும் நீர் மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதால், அடுத்த வருடம் நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என குறிப்பிட்டார். “கடந்த ஆண்டுகளில், ஆண்டின் இந்த நேரத்தில் இந்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், தற்போது ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதன் மூலம் நமக்கு நன்மை கிடைத்துள்ளது. நீர்மின் உற்பத்தியின் பயன்பாட்டை எங்களால் அதிகப்படுத்த முடிகிறது, மேலும் நமது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும், எங்களிடம் உள்ள மற்ற எண்ணெய் மற்றும் டீசல் ஆலைகளையும் நிறுத்த முடிந்தது” என்று அமைச்சர் கூறினார். 2024 ஏப்ரலில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய முதலில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் ஜனவரி நடுப்பகுதியில் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் விஜேசேகர மேலும் விளக்கமளித்தார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;