Site icon Colourmedia News

வானிலை முன்னறிவிப்பு! 28.11.2023

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

Exit mobile version