Site icon Colourmedia News

பிலியந்தலை போகந்தர பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய முன்னாள் முகாமையாளர் கைது!

பிலியந்தலை போகந்தர பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கி வந்த பிலியந்தலை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோசடி, நம்பிக்கை மீறல், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை, துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு,  வாக்குமூலம் பெற்றதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 409 லீற்றர் பெற்றோலை மோசடி செய்துள்ளமையும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

Exit mobile version