Site icon Colourmedia News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு குறித்த முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 337,591 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 15 ஆம் ‌திகதி 2,888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

Exit mobile version