களுத்துறை – பேருவளை பிரதேசத்தில் அரிய வகை வலம்புரிச் சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞராவார்.
பேருவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வலம்புரி சங்கொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வலம்புரிச் சங்கை 5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய இருந்த போதே சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.