2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை எளிதாக்கும் முயற்சியில், பொதுத்துறையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவன கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.
இதன்படி, அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குவதற்கு முழு அதிகாரம் கொண்ட டிஜிட்டல் அதிகாரசபையை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.
இன்று (நவம்பர் 13) காலை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையின் போது, பொதுத்துறை, நிபுணர் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கவுன்சில் ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய போக்குகளின் அடிப்படையில் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 3 பில்லியன் இந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
“இந்த உட்கட்டமைப்பிற்கான முக்கியமான முதுகெலும்பாக இலங்கையின் டிஜிட்டல் அடையாளத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என ஜனாதிபதி விக்கிரமசிங்க இது தொடர்பில் தெரிவித்தார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;