நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்புறுவத்த கரவிட்ட பகுதியில் கினிபொக்குஎல ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே கொஸ்வத்த பலுவெல்ஹார பகுதியில் கொஸ்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பலுவெல்ஹார பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.