Site icon Colourmedia News

கால்வாய்க்குள் தவறி வீழ்ந்து ஒருவர் மரணம்: இங்கிரியவில் சம்பவம்!

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள  கால்வாய் ஒன்றில்  வீழந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிரிய ஹந்தபாங்கொட  விகாரைச் சந்தியில் வசித்து வந்த பந்துல பிரியந்த ஜயகொடி என்ற 55 வயதுடைய திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கால்வாயின் மேல்  கட்டப்பட்டிருந்த தடுப்புச்  மதிலில் அவர்  உறங்கிக் கொண்டிருந்தபோது   அவர் கால்வாய்க்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அருகில் உள்ள  சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெரா மூலம் இது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version