Site icon Colourmedia News

இன்றைய ராசிபலன் – 10.11.2023

பஞ்சாங்கம்

நாள்சோபகிருது வருடம் ஐப்பசி 24, வெள்ளிக்கிழமை 10.11.2023
திதிதேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), துவதசி, 10-11-2023 12:32 PM வரை
நட்சத்திரம்ஹஸ்தம் – நவம்பர் 09 09:57 PM – நவம்பர் 11 12:08 AM சித்திரை – நவம்பர் 11 12:08 AM – நவம்பர் 12 01:47 AM
யோகம்விஷ்கம்பம், 10-11-2023 05:02 PM வரை
நல்லநேரம்காலை             12:15 – 1:15 am
மாலை             4:45 – 5:45 pm
பகல்                12:15 – 1:15 am
இரவு                 6:30 – 7:30 pm
தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு நேரம்    10:33 AM to 12:01 PM
எமகண்டம்   02:57 PM to 04:24 PM
குளிகன்          07:37 AM to 09:05 AM
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்

மேஷ ராசி அன்பர்களே!

திடீர் பணவரவும் அதற்கேற்ற செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. விநாயகரை வழிபடுவதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்துவிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடக ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கத் தேவையான பணம் கிடைப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று காலையிலேயே தொடங்கும் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டா லும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

நேற்றுவரை இருந்த மனச்சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மகாலட்சுமியை வழிபட செலவுகளைச் சமாளித்துவிட முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே செய்துவாருங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். பணிகளில் நிதானம் அவசியம். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நல்ல நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிவபெருமானை வழி படுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

முற்பகலில் பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள் வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மீனராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. என்றாலும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பப் பெரியவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

Exit mobile version