Site icon Colourmedia News

யாழ். பல்கலைகழக மாணவர்கள் கைது – புலம்பெயர் அமைப்பு கண்டனம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  யாழ் பல்கலைழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவை தளமாக கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு கண்டித்துள்ளது.

ரணில்விக்கிரமசிங்க ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தினால் யாழ்பல்கலைகழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதை தமிழ் அமெரிக்கர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்

ஜனநாயக விழுமியங்களிற்கு மதிப்பளிக்காத நாடு இலங்கை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை அரசாங்கத்தின் ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்கவேண்டும்.

தமிழர்கள் பிரதேசங்களை சுயராஜ்யம் இல்லாத பிரதேசமாக பிரகடனம் செய்யுமாறும் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பை நடத்துமாறும் ஐநாவையும் அமெரிக்காவையும் கேட்டுக்கொள்கின்றோம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Exit mobile version