Site icon Colourmedia News

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தில் 18 வயதுடைய இளைஞன் கைது !

புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.

அண்மையில் புத்தளம் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி சிறுமியை திருமணம் செய்த நிலையில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேக நபர் தங்களது திருமண சான்றிதழ் மற்றும் சிறுமியின் பிறப்பு சான்றிதழ் முதலியவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version