இலங்கை அணிக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பு தொடர்ந்து பிரகாசமாகவே உள்ளது. இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளில் வெற்றிபெறுவது அவசியம் என்றபோதும் மற்ற போட்டிகளின் முடிவுகளும் இலங்கையின் வாய்ப்பை அதிகரிப்பதாக இருக்கும்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணி எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை சந்திக்கவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து தோற்றால் இலங்கை ஏஞ்சிய போட்டிகளில் இரண்டில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியுமாக இருக்கும்