உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் சதம் விளாசிய நிலையில், கடைசி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை வரலாற்றிலே இதுதான் அதிவேக சதம் ஆகும். இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மார்க்ரம் படைத்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்