Site icon Colourmedia News

கனடாவினஂ முதல் கறுப்பின சபாநாயகராக ​கிரெக் பெர்கஸ்

கனடாவின் முதன் முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கருப்பின நாட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பழமைவாதிகளின் எதிர்ப்பு

கியூபெக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெர்கஸ், ஆறு வேட்பாளர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என கனடிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒத்துழைப்பும் ஸ்திரத்தன்மையும் நிச்சயமாக நியாயமானதாக இருக்கும் என்று கிரெக் பெர்கஸ் தனது பதவியேற்பின் போது உறுதியளித்துள்ளார். மேலும், சில பழமைவாதிகள் பெர்கஸின் வேட்புமனுவை எதிர்த்துள்ளனர். கால்கேரி நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பல் கார்னர் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்று தனது பகிரங்க கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசிய வாக்கெடுப்பில் பெர்கஸினை எதிர்க்கும் முகமாக நேரடியாக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் அந்தோனி ரோட்டா, நாஜி கட்டளையின் கீழ் போராடிய உக்ரைனிய-கனேடிய வீரரை பகிரங்கமாக ஆதரித்த பின்னர், அறையில் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் இழந்தார்.இதனால் அவர் பதவி விலகினார். இதன் காரணமாக புதிய சபாநாயகராக கிரெக் பெர்கஸ் பதவியேற்றுள்ளார்.

Exit mobile version