Site icon Colourmedia News

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான்

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றதுடன் அப்துல்லா ஷபீக் 58 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் அகமட் 3 விக்கெட்டுக்களையும், நவீன் உள் அக் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய ரஹ்மத் ஷா 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Exit mobile version