உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இறுதியாக அந்த அணி, 215 ரன் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 69 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது. அந்த, அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரகுமான், ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D
புதுடெல்லியில் நடைபெற்ற இன்றைய உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49 புள்ளி ஐந்து ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன் எடுத்தது. 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன் எடுத்து வெளியேறினர்.