Site icon Colourmedia News

கிருலப்பனையில் இறப்பர் தொழிற்சாலையின் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு

கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான  அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது  இறப்பர் தொழிற்சாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணியில் இருந்துள்ளதோடு, அவருக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version