கண்டி கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய்யிருந்தமை குறிப்பிடத்தக்கது