Site icon Colourmedia News

38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலி

மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 38 வயது இளைஞரொருவர் பரிதாபமான முறையில் பலியான சம்பவம் இன்று (3) மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது புகையிரதம் மோதுண்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் காரணமாக முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த நபர் ஸ்தலத்திலேயே பலியானார்.

Exit mobile version