Site icon Colourmedia News

A11 வீதியின் சிறுபாலங்களை  விரைவில் அபிவிருத்தி நடவடிக்கை

பொலன்னறுவை மாவட்டத்தின், ஹபரண –  மட்டக்களப்பு A11 வீதியில் அவதானத்துடன் காணப்படும் இடமாக அடையாளம் காணப்பட்ட படுஓயா பாலம் உட்பட சிறிய பாலங்கள் சில போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தனது விசேட  அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

2019இல் ஆரம்பிக்கப்பட்ட  அபிவிருத்தி செயற்பாடுகள் இப்பாலத்தை நிருமாணிப்பதற்குப் பொறுப்பெடுத்த கம்பனி 2021 இல் மாத்திரம் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன.

பொலன்னறுவை மன்னம்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துத் தொடர்பான காரணங்களை ஆராய்ந்து இது குறித்து விசேட கவனம் செலுத்திய அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு விரைவாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

Exit mobile version