Site icon Colourmedia News

சீனாவில் சித்திரவதைக்குள்ளாகப்போகும் இலங்கை குரங்குகள் ! வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்

ஆரம்பத்தில் சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவித்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தற்போது அது சீனாவின் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை என்ற புதிய கதையை கூறியுள்ளார். குரங்குகள் சீனாவின் மிருககாட்சி சாலைகளுக்கு அனுப்பப்படப் போவதில்லை…அவை அங்கு சோதனை கூடங்களில் சித்திரவதைக்கே கொண்டு செல்லப்படுகின்றன என்று தெரிவித்துள்ள சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையமானது இந்த செயற்பாட்டை விவசாய அமைச்சர் வாபஸ் வாங்கா விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளது. மேலும் ஒரு நாட்டின் விலங்குகளை இன்னுமொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விவசாய அமைச்சருக்கு உள்ள அதிகாரங்கள் என்னவென்றும் கேந்திர நிலையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Exit mobile version