Site icon Colourmedia News

புத்தாண்டு காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா ? இல்லையா? இன்று முடிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று (1704/2023) தீர்மானிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

முன்னதாக, எரிபொருள் ஒதுக்கீட்டை நாளை (18) முதல் முந்தைய அளவுகளுக்கு திருத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், எரிபொருள் ஒதுக்கீட்டை மீளத் திருத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

Exit mobile version