தேர்தல்கள் திணைக்ளம் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகளை தமது திணைக்களத்திடம் ஒப்படைத்த பின்னர் குறித்த நிறவனங்களுக்கு தாமதம் இன்றி அவற்றை பகிர்ந்தளிப்பதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.
தேர்தலுக்காக தமது திணைக்களத்தின் செலவுகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்