ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பதவி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தயங்க மாட்டோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) காரணம் என்று கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு நிர்ணயித்த அளவுகோல்களை நிறைவேற்றியதன் பின்னர் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் தற்போது இலங்கையின் எதிரியாக பார்க்கப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி இவ்வாறு தொடர்ந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்