Site icon Colourmedia News

இன்று, சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1857ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

நியூயோர்க் நகரில்  இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இந்தத் தினத்தைப் பிரகடனம் செய்ய வழிவகுத்தது.

1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தில் குறிப்பிட்ட வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி ஊர்வலங்கள் இடம்பெற்றன.

இதனைத்தொடர்ந்து ஒருவருடத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை . கிளாரா ஜெட்கின் 1910இல் முதல் முறையாக அறிவித்தார்.

1910ஆம் ஆண்டு டென்மார்க்கில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது சமர்ப்பிக்க யோசனைக்கு அமைய மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி தொடக்கம்

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி 1996 இல் ‘கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்’ என்பது ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருளாக அமைந்தது.

சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டாடும் நாளாக மகளிர் தினம் இன்று மாறியுள்ளது.

இலங்கை 1978ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

Exit mobile version