காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் நீர்வேலி தெற்கு, நீர்வேலியைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் பாவிதான் என்ற 23 வயது இளைஞரே ஆவார்.
குறித்த இளைஞர் கடந்த 23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் காரின் பின்பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.
மயக்கமடைந்த இளைஞர் மீட்கப்பட்டு கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (பெப். 28) செவ்வாய்க்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.