Site icon Colourmedia News

மின்கட்டண அதிகரிப்பால் ஆத்திரமடைந்த நபர் மின்சார சபை வாகனத்தில் ஊழிர்கள் மீது கல்லால் தாக்க முயற்சி!

அகலவத்தை பிரதேச வீதி ஒன்றின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யச் சென்ற  உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் மின்சார ஊழியர்களை கல்லால் தாக்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று  (21) கைது செய்யப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

அகலவத்தை பிராந்திய மின்சார சபையினர்  மின்சார கட்டணத்தை அதிகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மின்சார ஊழியர்கள் மற்றும் அவர்களது உத்தியோகபூர்வ வாகனம் மீது  குறித்த நபர் கல்லால் தாக்க முயற்சித்துள்ளார்.

இது தொடர்பில் மின்சார ஊழியர்கள் அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் தரிந்து ஹெட்டியாராச்சி  அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரை கைது  செய்துள்ளனர்.

Exit mobile version