Site icon Colourmedia News

ஜீப் மோதியதில் முதியவர் பலி

திஸ்ஸமஹாராம பகுதியில் ஜீப் வண்டி மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திஸ்ஸமஹாராம, கிரிந்த வீதியின் சேனநாயக்க சந்தியின் கிரிந்த பகுதியில் இருந்து திஸ்ஸமஹாராம நோக்கி பயணித்து கொண்டிருந்த ஜீப் வண்டி வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த நபர் தெம்பரவௌவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 70 வயதுடைய மாகம, திஸ்ஸமகாராமை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

விபத்து தொடர்பில் ஜீப் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version