Site icon Colourmedia News

ஆசிரியர் உட்பட மாணவர்கள் மூவர் சடலமாக மீட்பு!

கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் மூவர் உட்பட ஆசிரியர் ஒருவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் நேற்று பிற்பகல் சென்றிருந்தனர்இதன்போது, கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் இவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் உயிரிழந்திருந்ததுடன், மூன்று மாணவர்களும் காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து, காணாமல் போன மாணவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் பணிகளின் போதே குறித்த மூன்று மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Exit mobile version