Site icon Colourmedia News

சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்: வாகனம் நீர்கொழும்பில் மீட்பு

பத்தரமுல்லை, தலங்கம, பெலவத்த பகுதியில் அதிசொகுசு மாடி வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திலிருந்து, வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், தலங்கம பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் பயன்பபடுத்திய கார் நீர்கொழும்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காரை செலுத்தி வந்த தம்பதியினர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த SHADES எனும் ஆடையகத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் (50) சடலம் அவரது பெலவத்தை எம்.டி.எச். வீதியில் உள்ள சொகுசு வீட்டின் 2ஆவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில் நேற்று (02) கண்டுபிடிக்கப்பட்டது.

Exit mobile version