Site icon Colourmedia News

இன்றைய ராசி பலன்

மேஷம்

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள்.சிக்கலான வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வேகமும் விவேகமும் கலந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். மனை இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள்.

ரிஷபம்

தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் பெறுவீர்கள். உறவினர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை பக்குவமாக சமாளிப்பீர்கள். சவாலான காரியங்களில் விரைந்து வெற்றி அடைவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள்.

மிதுனம்

வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய முக்கிய தகவல்கள் தாமதமாவதால் டென்ஷனாவீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் அலட்சியமாக நடந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள். சக ஊழியர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். அதிகமான உழைப்பால் விருத்தி காண்பீர்கள். வெளியூர் பயணத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.

கடகம்

வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தைப் பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் தடுமாறுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி காதலியின் கரம் பற்றுவீர்கள். தாயாரின் சுவாசப் பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

சிம்மம் தங்:க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் முன்னேற்ற அடைவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள்.

கன்னி :

தனியார் துறையில் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பீர்கள். ஒர்க் ஷாப் நடத்துபவர், டீக்கடை, பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவீர்கள். ஏற்கனவே கொடுத்த பழைய பாக்கிகள் வசூலாகி மனத் திருப்தி அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை பார்த்து தவணை கடனை கட்டுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை அடைவீர்கள்.

துலாம்:

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள். கிடைக்குமா என்று நினைத்த பணம் எதிர்பாராமல் கைக்கு வந்து கடன்களை அடைப்பீர்கள். பம்பரமாகச் சுழன்று புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தை நடத்துவீர்கள்

விருச்சிகம் :

புத்திசாலித்தனமாக தொழிலை நடத்த வேண்டும். வியாபாரத்தில் வரும் வில்லங்கங்களை அறிவுக் கூர்மையால் விலக்க வேண்டும். வெளியூர்ப் பயணங்களில் தடை உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய செய்திகள் தாமதமாகும். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். டீக்கடையில் அமர்ந்து விவாதம் செய்யாதீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

தனுசு விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். அதற்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் பார்க்க பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தேவையான நிதி உதவி பெறுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள்.

மகரம்:

விளையாட்டுக்குப் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். மனைவியோடு மல்லுக் கட்டாதீர்கள். தொழிலை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். சிறிய கம்பெனிகள், இரும்பு நிறுவன முதலாளிகள் முன்னேற்றம் காண்பீர்கள். தள்ளுவண்டி வியாபாரிகள் தன்னிறைவு பெறுவீர்கள். நடைபாதை கடைக்காரர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.

கும்பம்:

கடன் வாங்கி குடும்பத் தேவையை நிறைவு செய்வீர்கள்‌. பணியாளர்கள் சம்பளப் பற்றாக்குறையால் சங்கடப் படுவீர்கள். எதிர்பார்த்து கிடைக்காத பணம் சிலருக்கு எதிர்பாராமல் வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பச் செலவு அதிகரிப்பால் திணறுவீர்கள். கடன் கொடுத்து தேவையில்லாத பகையை சம்பாதிப்பீர்கள். அஜீரணக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.

மீனம்:

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள். எலக்ட்ரீசியன், கொத்தனார் போன்ற வேலை பார்ப்பவர்கள் சாப்பிட கூட நேரம் இல்லாமல் பணி செய்வீர்கள். பழைய சாமான்கள் வாங்கி விற்பவர்களும் நல்ல பலனைப் பெறுவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

Exit mobile version