Site icon Colourmedia News

இன்றைய ராசிபலன்:17ஜனவரி2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங் கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சரபேஸ்வரரை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செயலில் நிதானம் தேவை.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர் கள். மாலையில் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிப்பீர்கள். உடல் ஆரோக் கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர் களால் செலவுகள் ஏற்படும். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களி டம் கனிவான அணுகுமுறை மிக அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள் ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். பிள்ளை அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் எதிர் பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைப்பது உற்சாகம் தரும். லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத் தில் பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்க வும். சிலருக்கு வீண் அபவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். துர்கையை வழிபட எதிலும் வெற்றியே ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

Exit mobile version