துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று சாதகமான டாக்கா மைதான ஆடுகளத்தில், சராசரியான பந்துவீச்சு பிரதியியுடன் விஜயாந்த் வியாஸ்காந்த் தன்னுடைய BPL பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அபிப் ஹொஷைன் தலைமையின் கீழ் விளையாடிய வியாஸ்காந்த் 3 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றி தன்னுடைய அறிமுகப்போட்டியை நிறைவுசெய்துக்கொண்டார். தன்னுடைய முதலாவது விக்கெட்டுக்காக பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலின் விக்கெட்டினை இவர் கைப்பற்றியிருந்தார்.
குறித்த இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குல்னா டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்துக்கொண்டது.