Site icon Colourmedia News

550 இலங்கையர்களுக்கு, அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு

550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், 200 தாதி உதவியாளர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Exit mobile version