Site icon Colourmedia News

புதிய ஏர்பாட்ஸ் வாங்கி உள்ளீர்களா? அவற்றை கையாள்வதற்கான சில டிப்ஸ்

ஐபோன் தவிர மற்ற டிவைஸ்களுடனும் பேர் செய்யலாம் : உங்களது ஏர்பாட்ஸ்களை ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட், மேக், ஆப்பிள் டிவி, விண்டோஸ் லேப்டாப், மற்றும் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடனும் நீங்கள் தயார் செய்து பயன்படுத்த முடியும். ஏர்பாட்ஸ்டுகளுக்கு பின் இருக்கும் சிறிய பட்டனை அழுத்தி நீங்கள் டிவைசுடன் ஷேர் செய்யலாம்.

ஃபைண்ட் மை ஃபீச்சர்: இந்த பைண்ட் மை ஃபீச்சர் வசதியானது ஏர்பாட்ஸ் 3 மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவற்றில் உள்ளது. இதன் மூலம் உங்களது ஏர்பாட்ஸ்களின் கேசை, நீங்கள் தவறுதலாக எங்கேயும் மறந்து வைத்து விட்டாலும் அல்லது தொலைந்து விட்டாலும் ஒரு நோட்டிபிகேஷன் அலர்ட் மூலம் உங்கள் உங்கள் ஃபோனிலேயே ஏர்பாட்ஸ் இருக்கும் இடத்தை கண்டறிந்து விட முடியும்.

ஏர்பாட்ஸ்களிலேயே கட்டளைகளை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்’: உங்களது இயர் பட்ஸ் மூலமே பெரும்பாலான கட்டளைகளை உங்களால் கஸ்டமைஸ் செய்து வைத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஆக்டிவேட் சிரி, பாடல்களை மாற்றுவது, பிளே மற்றும் பாஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்ய முடியும். இதற்கு உங்கள் மொபைலில் ஏர்பாட்ஸ்களின் பெயருக்கு பக்கத்தில் உள்ள i என்ற பட்டனை கிளிக் செய்து, அதன் பின் ஏர்பாட்ஸ் என்பதை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

டிவைஸர்களை ஸ்விட்ச் செய்து கொள்ளலாம் : உங்களது ஏர்பாட்ஸ்களை ஒன்றுக்கு மேற்பட்ட டிவைஸ்களுடன் ஏற்கனவே பேர் செய்து வைத்திருந்தால் அவை தானாகவே ஒரு டிவைஸிலிருந்து மற்ற டிவைஸுக்கு மாறும் போது அதனுடன் பேர் ஆகி விடும். இந்த ஆட்டோமேட்டிக் ஸ்விட்ச் வசதியை நீங்கள் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

Exit mobile version