Site icon Colourmedia News

போக்குவரத்து அமைச்சின் நிறுவனங்களில் ஊழல்

புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால், போக்குவரத்து அமைச்சின் கீழியங்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்து, பெறப்படும் பற்றுச் சீட்டை அமைச்சில் சமர்ப்பித்தால் உரிய நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்த வித பாரபட்சமுமின்றி தண்டனை வழங்கவும் பின்னிற்கப் போவதில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version