Site icon Colourmedia News

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று(02) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவாலும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 405 ரூபாவாகும்.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 355 ரூபாவாகும்.

இதனிடையே, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக, லங்கா IOC நிறுவனமும் இன்று(02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Exit mobile version