Site icon Colourmedia News

முன்னாள் பாப்பரசர் 16ஆவது பெனடிக் காலமானதாக வத்திக்கான் அறிவிப்பு

முன்னாள் பாப்பரசர் 16ஆவது பெனடிக் இன்று காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் பாப்பரசருக்கு 95 வயது.

ஜெர்மனியை சேர்ந்த பெனடிக்ட், 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். ஆனால் 8 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வத்திக்கானில் உள்ள மடாலயத்தில் கழித்து வந்த நிலையில்,பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்.

Exit mobile version