Site icon Colourmedia News

போதை பொருட்களுடன் சுற்றுலா வந்த 8 பேர் கைது

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிராயாணிகள் நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகமான சுற்றுலா பிராயாணிகள் புகையிரதங்களின் மூலமே வருகை தருகின்றனர்.

இதனால் புகையிரதங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பிராயாணிகள் செல்வதனால் புகையிரதங்களில் நெரிசல் நிலை காணப்படுகின்றன.

மலையக பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு வருவதனை தடுக்கும் நோக்கில் ஹட்டன் பொலிஸ் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புகையிரதங்களில் வருபவர்களை ஹட்டன் புகையிரத நிலையத்திலும் வாகனங்களில் வருபவர்களை கினிகத்தேனை கலுகல தியகல உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு சோதனை நடவடிக்கையின் போது நேற்றும் இன்றும் 08 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Exit mobile version