Site icon Colourmedia News

பிலிமத்தலாவயில் இருந்து பேராதனை வரையான ரெயில் பாதையில்; மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

சீரற்ற காலநிலையினால் மலையக ரெயில் சேவைகள் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதானாலேயே ரெயில் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (25) இரவு சேவையில் ஈடுபடவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லவிருந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிலிமத்தலாவயில் இருந்து பேராதனை வரையான ரெயில் பாதையில்; மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. உலப்பனை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதனால் பதுளையில் இருந்து கொழும்பிற்கான ரெயில் சேவை நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version