Site icon Colourmedia News

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர் மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குண்டே களு எனப்படும் எஸ். அருணசாந்த என்ற 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான புலன் விசாரணைகளை கம்பளை விசேட பொலிஸ் பிரிவினரும் புசல்லாவை பிரேத பரிசோகரும் மேற்கொண்ட நிலையில் சடலம் புசல்லாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version