Site icon Colourmedia News

இலங்கைக்கு 94 ஆவது இடம்

உலகில் வலுவான கடவுச்சீட்டுப்பட்டியலில் இலங்கைக்கு 94 ஆவது இடம் கிடைத்துள்ளது.

Global passport power rank index 2018 என்ற பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக இலங்கைக்கு 39 புள்ளிகள் கிடைத்துள்ளன. விசா வழங்கலை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2018 ஆய்விற்கமைவாக இம்முறையும் உலகின் காத்திரமான கடவுச்சீட்டுக்கான முதலிடத்தை சிங்கப்பூர் பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு 164 புள்ளிகள் வழங்கப்பட்டள்ளது.

163 புள்ளிகளை பெற்ற தென்கொரியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது .

162 புள்ளிகளை பெற்ற ஜப்பானுக்கும் ஜேர்மனுக்கும் 3ஆவது இடம்கிடைத்துள்ளது 161 புள்ளிகளை பெற்ற 6 நாடுகள் நான்காம் இடத்தை பெற்றுள்ளன. 58 புள்ளிகளை பெற்று இந்தியா 76 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் 25 புள்ளிகளை பெற்று இறுதியிடத்தை பெற்று 100ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Exit mobile version